-

அ மே நி ப கள்ளிகுடி நிகழ்வுகள்( படம் )

அ மே நி ப கள்ளிகுடி நிகழ்வுகள்( படம் )கிளிக் செய்யவும்

FLASH NEWS

FLASH NEWS இனைய தளம் வடிவமைப்பில் உள்ளது

Friday, March 18, 2011

 
 "பிளஸ் 2 கணித வினாக்கள் எளிமை' : ஆசிரியர் மாணவர்கள் கருத்து பதிவு செய்த நாள் : மார்ச் 18,2011,00:07 IST  மதுரை : பிளஸ்2 கணிதத் தேர்வு எளிமையாக இருந்தது என ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர். மதுரை டி.வி.எஸ்.,சுந்தரம் மேல் நிலைப் பள்ளி மாணவி எஸ்.வைஷாலி: ஆறு மதிப்பெண் வினாக்களில் மூன்று வினாக்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமை. குழப்பமான வினாக்கள் என எதுவும் கிடையாது. எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. பொதுவாக கொஞ்சம் சிரமமான கேள்விகள் .

பாப்பிநாயக்கன்பட்டி ஸ்ரீகந்தசாமி வித்யாலயா பள்ளி மாணவர் பி.விக்னேஷ்: இரண்டு ஒரு மதிப்பெண் வினாக்கள் குழப்பமாக இருந்தன. 10 மதிப்பெண் வினாக்களை சாதாரண மாணவர்களும் எழுதியிருப்பர். ஆறு மதிப்பெண் வினாக்கள் கொஞ்சம் சிரமமாக இருந்தன. குறித்த காலத்தில் தேர்வை எழுதிவிட்டோம். பாடத்தின் வெளியில் இருந்து வினாக்கள் எதுவும் வரவில்லை. சாதாரண மாணவர்கள் 150 மதிப்பெண் பெறுவர். எனக்கு 195க்கு மேல் கிடைக்கும்.

கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்என்.ஆர்.ராஜா: கடந்த ஆண்டு 100 சதவீதம் எதிர்பாராத வினாக்கள் வந்திருந்தன. இந்த ஆண்டு 50 சதவீத வினாக்கள் எதிர்பாராதவைதான். மூன்று பாடங்களில் 10 மதிப்பெண் உள்ள 4 வினாக்கள் நேரடியாகவே கேட்கப்பட்டு இருந்தன. இதை அனைவரும் எழுதியிருப்பர். இரண்டாவது தொகுதியில் ஒரு வினாதான் (வளைவரை வரைதல்) எதிர்பார்த்தது கேட்கப்பட்டு இருந்தது. மற்றவை அனைத்தும் எதிர்பாராதவையே. வினாத்தாளை பொறுத்தவரை எளிதான வினாக்கள் என்றே கூற வேண்டும். 

No comments:

Post a Comment